
அன்புள்ளம் கொண்ட தமிழ் சொந்தங்களுக்கு,
உலக மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களில், மிகப்பெரும் நாவலாக வடிவெடுத்து நிற்கிறது தமிழ் நாவலான வெண்முரசு! நாம் வாழும் காலத்தில் தமிழில் நிகழ்ந்திருக்கும் இந்த பிரம்மாண்டமான சாதனையை கொண்டாடும் விதமாக, தென் கலிபோர்னியா மாகாணத்தின் அனைத்து தமிழ் சங்கங்களும் மற்றும் பிற அமைப்புகளும் முழுமனதோடு ஒன்றிணைத்து, ‘வெண்முரசு கொண்டாட்டம்’ ஆவணப்படம் திரையிடலை முன்னெடுக்கின்றன. ஆவணப்படம் வரும் ஜூன் 12-ம் தேதி, பிற்பகல் 2 மணிக்கு, தென் கலிஃபோர்னியாவின் ஆரஞ்சு நகரில் திரையிடப்பட உள்ளது.
பிரபல எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி இலக்கிய உலகின் பெருஞ்சாதனையான வெண்முரசு வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் கொண்டாடுகிறார்கள். இது ஏன் ஒரு வரலாற்று தருணம் என்றும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இப்பெரும் இலக்கிய நிகழ்வில் பங்கு பெற, தென் கலிஃபோர்னியாவில் வசிக்கும் அனைத்து தமிழ் சொந்தங்களையும் வருக வருக என்று வரவேற்கிறோம். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் முன்பதிவு செய்து கொள்ள http://tinyurl.com/venmurasu இணையதளத்தை உபயோகிக்கவும்.
தென் கலிபோர்னியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன. இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆரஞ்சு கவுண்டி மஞ்சள் அடுக்கில் தொடர்ந்து இருப்பதால், இரண்டு தடுப்புஊசிகளும் எடுத்துக்கொண்டவர்கள் கலந்து கொள்ளும் திரையிடல், 75% திரையரங்கை உபயோகித்து கொள்ளமுடியும். திரையிடலில் பங்குபெறுபவர்கள் அரசாங்க, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் திரைஅரங்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுறுத்தபடுகிறார்கள்.
வெண்முரசை பற்றி மேலும் அறிந்து கொள்ள: https://en.m.wikipedia.org/wiki/Venmurasu
வெண்முரசை ஆன்லைனில் படிக்க: https://venmurasu.in/
Related posts:
No related posts.